பாடகி சின்மயி தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை தொடர்ந்து தன்னை போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்தும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

கவிஞர் வைரமுத்துவால், சில வருடங்களுக்கு முன்பும் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட பாலியல் வன்கொடுமை குறித்து பதிவிட்டு, அது தொடர்பாக பேட்டியும் கொடுத்துள்ளார் பாடகி சின்மயி.

சின்மயின் இந்த குற்றச்சாட்டுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர், ,இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவின் மூத்த மகன் மதன் கார்க்கி, சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பதிவு ஒன்று வைரலாகியுள்ளது.

‘சின்மயி நீ சரியான பாதையில் செல்கிறாய், உனக்கு எப்போதும் நான் ஆதரவாக இருப்பேன்’ என்று கூறியுள்ளார்.

ஆனால், இது பழைய பதிவு ஆகும். இதற்கு முன்னர் டுவிட்டரில் சின்மயி தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பதிவிட்டபோது, மதன் கார்க்கி ஆதரவு கொடுத்துள்ளார்.

அவரின் இந்த பழைய பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

34 Shares