சின்மயி ஏற்படுத்தியுள்ள சர்ச்சை தமிழ் சினிமா துறையில் பூதாகரமாக வெடித்துள்ளது.

இதுபற்றி பலரும் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தற்போது பாஜகவை சேர்ந்த தமிழிசை சௌந்தர்ராஜன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அரசியலை குறைசொல்லும் சினிமா துறையினர் இந்த சர்ச்சைக்கு வாய் திறக்காதது ஏன் என கேட்டுள்ளார்.

“பாடகி சின்மயின் கருத்து கவனிக்கப்படவேண்டியது.நிச்சயம் விசாரிக்கப்படவேண்டியது.அரசியல்வாதிகள் அனைவரையும் விமர்சனம் செய்யும் திரைத்துறையினர் நடிகர்கள் தங்கள் துறையில் நடந்துள்ள தவறுகளை கண்டு கொள்ளாதது ஏன்??” என அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல், ஊழல் பற்றி மிக ஆவேசமாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைத்தான் மறைமுகமாக தமிழிசை தாக்கி பேசியுள்ளார் என கூறப்படுகிறது.

24 Shares