சோமாலிய வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய மனிதப் படுகொலையின் ஓராண்டு நிறைவில் அதனுடன் தொடர்புடைய ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைநகர் மொகடிஷூவில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் போது வெடிபொருட்கள் அடங்கிய ஒரு வாகனத்தை ஹசன் அதான் இஷாக் என்பவர் செலுத்தியதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களின் போது சுமார் 600 பேர் வரை உயிரிழந்தனர். தலைநகரின் மிகவும் சனநெரிசல் மிக்க பகுதியில் இந்த தாக்குதல் இடம்பெற்றதன் காரணமாகவே இந்தளவிற்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டது.

இந்த படுகொலையின் ஓராண்டு நிறைவை நினைவுகூரும் முகமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலைநகரின் விசேட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளன. அத்துடன், இந்த சம்பவத்தை நினைவுபடுத்துவதற்காக அந்த பகுதிக்கு ‘ஒக்டோபர் 14 சந்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கடந்தாண்டில் இடம்பெற்ற சம்பவத்திற்கு எந்த தீவிரவாதக் குழுவும் பொறுப்புகூறவில்லை. எனினும், சோமாலியாவில் செயற்படும் முக்கிய இஸ்லாமிய தீவிரவாதக் குழுவான அல்-ஷபாப் குழுவே இதற்கு காரணமாக இருப்பதாக அங்கு நிலைகொண்டுள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

7 Shares