உலகின் முதல்நிலை இணையத்தளமான யூடியூப் (YOUTUBE) இன் சேவை தடைப்பட்டுள்ளது.

இந்தக் கோளாறு நேற்று இரவு முதல் காணப்படுவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இதனால், யூடியூப் வீடியோக்களைப் பார்வையிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதாகத் தெரிவித்துள்ள யூடியூப் செவை, இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு செய்தமைக்காக நன்றியும் தெரிவித்துள்ளது.

அதேநேரம், குறித்த கோளாறு சரிசெய்யப்பட்டதன் பின்னர், அறியத்தருவதாகவும் இதனால் ஏற்பட்ட அசளகரியத்திற்கு வருந்துவதாகவும் யூடியூப் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

8 Shares