நடைபெற்று முடிந்துள்ள அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் டிரம்பினுடைய குடியரசுக் கட்சி தோல்வியடைந்துள்ளது.

செனட் உறுப்பினர்கள் தெரிவுக்கான வாக்களிப்பில் 51 வீதத்தை டிரம்பின் குடியரசுக் கட்சியும், 43 வீதத்தை ஜனநாயகக் கட்சியும் பெற்றுள்ளது.

பிரதிநிதிகள் சபையில் 413 தொகுதிகளின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் டிரம்பின் குடியரசுக் கட்சி 193 ஆசனங்களைப் பெற்றுள்ளது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி 220 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியின் நான்கு ஆண்டு பதவியின் நடுப்பகுதியில் தேசிய அளவிலான இடைக்கால தேர்தல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்தத் தேர்தல் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜனாதிபதியின் செயற்பாடுகளை நிர்ணயிப்பதாக அமையவுள்ளது என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தேர்தலில் பிரதிநிதிகள் சபைக்கான 435 உறுப்பினர்களையும், செனட்டின் 100 உறுப்பினர்களில் 33 உறுப்பினர்களையும் அமெரிக்க மக்கள் தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

4 Shares