அமெரிக்காவின் கெலிபோனியா மாநிலத்தின் தவுஸன்ட் ஒக்ஸ் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களிடையே ஒரு பொலிஸ் அதிகாரி காணப்படுவதாகவும், 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவரும் உயிரிழந்தவர்களிடையே காணப்படுவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு இடம்பெறும் வேளை ஹோட்டலில் சுமார் 200 பேர் அளவில் இருந்துள்ளதாகவும் அந்நாட்டுப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

7 Shares