தமிழரசுக்கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் இருந்து சுமந்திரனை நீக்க வேண்டுமென மறவன்புலவு க.சச்சிதானந்தன் அனுப்பிய கடிதத்தை தமிழரசுக்கட்சி பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாது என அறிவித்துள்ளது. கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், வடமாகாண அவைத்தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் இன்று இதனை அறிவித்தார்.

அண்மையில் வவுனியாவில் நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதியை நீ என விளித்து பேசியிருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து, மறவன்புலவு க.சச்சிதானந்தன், அவசர கடிதமொன்றை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசாவிற்கு அனுப்பினார். அதில், சுமந்திரன் அப்படி விளித்தது தவறானதென்றும், அவரை கட்சியின் முக்கிய பொறுப்பிலிருந்து நீக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையில் சீ.வீ.கே.சிவஞானம் இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார். இதன்போதே, மேற்படி கருத்தை தெரிவித்திருந்தார்.

“மறவன்புலவு க.சச்சிதானந்தன் அனுப்பிய கடிதம் கட்சிக்கோ, மாவை சேனாதிராசாவிற்கோ இதுவரை கிடைக்கவில்லை. அப்படியொரு கடிதம் கிடைத்தால் கூட அதை பரிசீலனைக்கும் எடுத்துக் கொள்ள மாட்டோம். சச்சிதானந்தன் தமிழரசுக்கட்சியின் பொதுக்குழு கூட்டங்களில் கூட கலந்து கொண்டதாக தெரியவில்லை.

3 Shares