தனது புதல்வர்களுக்கான பதவி உயர்வுகளை வழங்கும் நடவடிக்கையினை கம்போடிய பிரதமர் ஹுன் சென் தடுத்துள்ளார்.

கம்போடியா நாட்டின் பிரதமர் ஹின் சென் (வயது-66), தனது மூன்று புதல்வர்களுக்கு வழங்கவிருந்த பதவி உயர்வுகளை அவர்களுடைய கல்வி மற்றும் இதர தகுதிகளைக் காரணங்காட்டி இன்று (வியாழக்கிழமை) தடுத்து நிறுத்தியுள்ளார்.

இராணுவத் துறையில் தனது இரு புதல்வர்களுக்கு வழங்கவிருந்த உயர் பதவியையும் இளைய மகனுக்கு நாடாளுமன்றத்தில் வழங்கவிருந்த ஆசனத்தையும் ஹுன் சென் முற்றாக மறுத்துப் பேசி தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதேவேளை, கடந்த ஜுலை மாதம் ஹீன் பதவியேற்றதிலிருந்து கம்போடியா அதிக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

5 Shares