சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் செயற்பட்ட பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது.

பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படும் நிலையில், பொலிஸ் திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது

அத்துடன், பொதுநிறுவன அமைச்சின் கீழ் அரச வங்கிகள் மற்றும் உப நிறுவனங்கள் அனைத்தும் இதுவரையில் செயற்பட்டு வந்த நிலையில், அவை தற்போது நிதி மற்றும் பொருளாதார அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

கடந்த அரசாங்கத்தில் இலங்கை மத்திய வங்கி தேசிய பொருளாதார அமைச்சின் கீழ் செயற்பட்டதுடன், ஏனைய அரச வங்கிகள் அரச முதலீட்டு அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

18 Shares