சீரற்ற கலநிலையால் பெய்து வரும் அடை மழை காரணமாக முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள குமுளமுனை  நித்தகைக்குளம் உடைப்பெடுத்ததில் சிக்கி காணாமல்போன 6 பேரையும் விமானப் படையினர் உலங்கு வானூர்தி மூலம் மீட்டுள்ளனர்.

இன்று காலை விமானபடையினரின் உலங்குவானூர்தியின் உதவியுடன் இராணுவம் மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவு பொலிசார் கிராம மக்கள் இணைந்து இந்த மீட்பு பணியில் ஈடுபட்டு இறுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த அனைவரையும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

202 Shares