மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக கொண்டுவரப்பட்ட நிம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே இந்த நாட்டில் அமைச்சரவை என எதுவும் இல்லை என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் என தெரிவிக்கப்படுபவரின் அலுவலகத்திற்கான நிதியை தடுக்க வேண்டும் என பிரேரணை ஒன்றினை கொண்டுவந்துள்ளதாகவும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வினை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலார் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேறகண்டவாறு கூறினார்.

மேலும் “தற்போது தாம் மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்திற்கான நிதியை நாங்கள் நிறுத்துவோம் இருப்பினும் அமைச்சுகளிற்கான நிதியை நிறுத்துவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை.

அத்துடன் அரச நிதியை கையாள்வதற்கான அதிகாரம் நாடாளுமன்றத்திடமே உள்ளது. நாட்டில் பெரும்பான்மை இன்றி ஆட்சி அமைப்பது என்பது ஜனநாயக மரபு இல்லை எனவே மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீட்டை நிறுத்துவதற்கான ஆறு பேர் கையொப்பமிட்ட யோசனை ஒன்றை ஐக்கிய தேசிய கட்சி இன்று சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

37 Shares