மலர்வு : 15  நவம்பர் 1968 — உதிர்வு : 10 டிசெம்பர் 2018

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுரேஷ்குமார் சின்னராசா அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னராசா, சுந்தராம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், பரமநாதன் ஞானம்பாள்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா(Credit Vally Hospital) அவர்களின் அன்புக் கணவரும்,
பவன்(Wilfrid Laurier University), மாயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
உதயகுமார்(கண்ணன்- அமெரிக்கா), சிறீக்குமார்(குமரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்ஆவார்.
மீளாத் துயில்கொண்டு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஆறாத துயரில் ஆழ்த்திய திரு சுரேஷ்குமார் சின்னராசா
அவர்களின் துயர்பகிர்வில் நாமும் பங்குகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா

10 Shares