(14.12.1940 – 20.08.2018)

திருநெல்வேலி கேணியடி இரத்தினம் மனோன்மணி பெற்றெடுத்த நவரத்தினங்களில் இரத்தினம் போன்றவர் என் தாத்தா.தன் குடும்பத்திற்காக தன் வாழ்வையே தியாகம் செய்த தியாகி.ஒன்று கேட்டால் டசினாக வாங்கி வாங்கி வருவார்..அவரைக் காண பல உறவுகள் ஓடி வருவார்கள்.பாசமழை பொழிவார்.வந்த உறவுகளை வெறுங்கையோடு விடமாட்டார்.என் தாத்தா நடமாடும் பள்ளிக்கூடம் அவரிடம் கற்றது தான் ஏராளம்.ஏழை பணக்கார் என்ற வித்தியாசம் பாராத கொடை சிகரம்.

கட்டில் முழுதும் காசைப் பரப்பி கணக்குப் பார்த்து சில்லறைக்காசை என்னிடம் அள்ளித் தரும் வள்ளல்.
விழி நீரும் வீணாக இமை
தாண்டக் கூடாதென துளியாக
துளியாக நான் சேர்த்தேன் கடலாக
கண்ணானதே………”
தாத்தாவின் நினைவுகள் என் நிழலோடு அசைகின்றன.நான் பல தோல்விகளை சந்தித்த போதிலும் எனக்கு கிடைத்த மிகப்பெரும் தோல்வி என் தாத்தாவின் மரணம்.பிறந்தவர்கள் என்றோ ஒரு நாள் இறப்பது தான் உலக நியதி.ஆனால் காலனவனிற்கு தெரியவில்லை என் தாத்தாவின் வாழ்வுக்காலம்.

என்னை சிறுவயதில் பாடசாலைக்கு சைக்கிளில் கூட்டிச் செல்வார்.வெள்ளை வேட்டி கட்டி வெள்ளை கோடு போட்ட சேட் அணிந்து சைக்கிள் பின்கரியலிற்கு துணி போட்டு மெத்தை போல் ஆக்கி பல கதைகள் சொல்லிக் கூட்டிச் சென்ற காலம் எங்கே.? என்ர பேர்த்தி எனக்கு உழைச்சு தரும்.என்னைப் பார்க்கும் என்று அடிக்கடி சொல்லுவார்.கடவுளுக்கு புரியவில்லையோ என்னவோ என் தாத்தாவை என்னோடு இன்னும் பல வருடம் இருக்க விடவில்லை.

என் தாத்தாவுடன் சந்தோஷமாய் வாழ ,அன்பு கொட்டி சிரிக்க விடவில்லை.என் தாத்தாவை அதே வெள்ளை வேட்டியுடன் காண என் மனம் ஏங்குது.தாத்தா வீட்டிலிருந்தால் ஆயிரம் பேருக்கு சமமாக பல கதைகள் கூறி எங்களை சிரிக்க வைத்து விட்டு தானும் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பார்.

அம்மா அடித்தாலும் அந்த அடியின் வலியைப்போக்கும் வல்லமை உண்டு என் தாத்தாவின் பாசத்திற்கு.பாசத்தின் சிகரம்.வீட்டில் வருத்தமாக இருந்த போது அடிக்கடி சங்கு சங்கு என்று கூப்பிடுவார்.இனி யார் எனனை அழைப்பார்கள்.விதியின் பாதையில் தானே செல்ல முடியும்.என் தெய்வத்தை இழந்துவிட்டு ஏம்பலித்து என் தாத்தாவின் அன்பிற்காக ஏங்கி நிற்கும் ஆருயிர் பேர்த்தி…… சங்கவி

11 Shares