தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் டுவிட்டரில் என்ன நடக்கிறது? என கேள்வி கேட்ட கேள்விக்கு, மூச்சு திணற, திணற அஜித் ரசிகர்கள் விஸ்வாசம் பட அடிச்சு தூக்கு பாடல் போஸ்டரை பதிவு செய்து மிரண்டு போக வைத்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் திரைப்படம் குறித்து எந்த தகவல் வந்தாலும் அவரது ரசிகர்கள் அதை டுவிட்டரில் டிரண்ட் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் விஸ்வாசம் படத்தின், ’அடிச்சு தூக்கு’ பாடல் கடந்த 10ம் திகதி 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் அறிவிப்பு வெளியிட்டது.

அந்த போஸ்டரை அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் பரப்பினர்.

இந்நிலையில் டுவிட்டர் ட்ரெண்டை பார்த்து தென் ஆப்ரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், “டுவிட்டரில் என்ன நடக்கிறது?” என கேள்வி கேட்டிருந்தார்.

அதற்கு தல ரசிகர்கள், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், அடிச்சு தூக்கு போஸ்டரை ஸ்டெயின் பக்கத்தில் பதிவிட்டும், அஜித் குறித்து பதிவிட்டனர்.

இதனால் விஸ்வாசம் பட ட்ரெண்ட் இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் கவனிக்கப்பட்ட விடயமாக மாறியது.

219 Shares