பிரான்ஸ் பாரிஸில் கிறிஸ்மஸ் சந்தை இடம்பெற்ற வேளை மாலையில் அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கடவுள் மிகச் சிறந்தவர் எனப் பொருள் தரும் அல்லாஹு அக்பர் என அரபு மொழியில் சத்தமிட்டதாக பொது வழக்கறிஞர் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

கிழக்கு பிரெஞ்சு நகரமான Strasbourg இல் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதோடு மற்றும் ஒருவர் மூளைச் சாவடைந்துள்ளதாகவும் ரெமி Heitz தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் பன்னிரண்டு பேர் காயமுற்றுள்ளதோடு இதில் ஆறு பேர் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செரிப் சேக்கட் என்று அடையாளம் காணப்பட்டுள்ள துப்பாக்கிதாரி சிறையில் இருந்தபோது தீவிரவாத போக்கைக் கொண்டிருந்தார் என்றும் முன்னரே அதிகாரிகளுக்கு அவர் பற்றிய விபரங்கள் தெரிந்திருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

29 வயதான இவர் துப்பாக்கி மற்றும் கத்தி ஆகியவற்றைக் கொண்டிருந்தார் என்றும் Heitz தெரிவித்துள்ளார். தப்பிச் சென்றுள்ள நபரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

4 Shares