மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் அன்ரன் பாலசிங்கத்தின் 12ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் குறித்த நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது, உயிர்நீத்த அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, பொதுச் சுடர் ஏற்றி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அக்கட்சியின் மட்டு.இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட கட்சி செயலாளர் க.ஜெகநீதன், பொருளாளர் க.கனகசபை (நாதன்), வவுணதீவு அமைப்பாளர் வி.வினோ, மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவலிங்கம் சுதர்சன் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

21 Shares