• மேஷம்மேஷம்: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்கவேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம்வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள்.உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.   
  • ரிஷபம்ரிஷபம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள். 
  • மிதுனம்மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள். வியாபார ரீதியாக சிலமுக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள்பலிதமாகும் நாள்.
  • கடகம்கடகம்: கடந்த இரண்டு நாட்க ளாக இருந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதிநிலவும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள். 
     
  • சிம்மம்சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.

  • கன்னிகன்னி: உங்களுடைய அறி வாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரவகையில் உதவிகள் கிடைக் கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  
  • துலாம்துலாம்: எதிர்பாராத பண வரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். தொட்ட காரியம் துலங்கும் நாள். 
  • விருச்சிகம்விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.நீண்ட நாள் பிரார்த்தனையைநிறைவேற்றுவீர்கள். உறவினர்
    களால் ஆதாயம் உண்டு. புது பொருள்கள் சேரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
  • தனுசுதனுசு: பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். பணப்பற்றாக்குறையை சமாளிப்
    பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். 
  • மகரம்மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அனுபவ மிக்கவேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். 

  • கும்பம்கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
  • மீனம்மீனம்: ராசிக்குள் சந்திரன்தொடர்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து  நீங்கும்.  சிலர்  உங்களை
    மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். திட்டமிட்டு செயல் பட வேண்டிய நாள்

32 Shares