தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை அளித்தும், மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா உயிரிழந்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க பெற்ற கட்டண விவரங்களை அப்பல்லோ மருத்துவமனையின் வழக்குரைஞர் தாக்கல் செய்தார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “75 நாட்கள் அப்பல்லோவில் தங்கியிருந்த ஜெயலலிதாவுக்கு உணவு அளிக்க 1.17 கோடி செலவாகியுள்ளது.

மேலும், ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு அப்பல்லோ மருத்துவமனை அளித்த சிகிச்சைக்கு அதாவது மருத்துவச் செலவு 6.85 கோடி செலவிடப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு 92.7 இலட்சமும், அறை வாடகைக்கு 24.19 இலட்சமும், பிசியோதெரபி சிசிச்சைக்காக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு 1.29 கோடியும் செலவிடப்பட்டது.

மருத்துவமனைக்கான மொத்த செலவுத் தொகையில் இதுவரை 6.41 கோடி ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 44.56 லட்சம் பாக்கித் தொகை வழங்க வேண்டும்” என்றும் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

19 Shares