Recently weaned pigs explore their new surroundings at a barn at the Hord Livestock company in Bucyrus, Ohio, Crawford County.

மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதய நோய்கள் காரணமாக பல உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக மாரடைப்பு மூலம் பலர் மரணம் அடைகின்றனர்.இந்த நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சையே சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால் இதயம் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மனித இதயத்துக்கு பதிலாக பன்றியின் இதயத்தை பொருத்தும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த ஆய்வினை ஜேர்மனியின் முனிச்லுத்விக் மேக்சி மில்லியன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

அவர்கள் பன்றியின் இருதயத்தை எடுத்து வால் இல்லாத ‘பபூன்’ இனத்தை சேர்ந்த 10 குரங்குகளுக்கு பொருத்தியுள்ளனர். ஆய்வில் 5 குரங்குகள் நீண்டநாட்கள் உயிர் வாழ்ந்தன. ஒரு குரங்கு 51 நாட்களும், 2 குரங்குகள் 3 மாதங்களும் உயிருடன் இருந்தன. மேலும் 2 குரங்குகள் 6 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்ந்தன.

இதனையடுத்து, இதன்மூலம் மனிதர்களுக்கும் பன்றி இருதயத்தை வெற்றிகரமாக பொருத்தலாம் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

0 Shares