ஐக்கிய தேசிய கட்சியினர் மக்கள் ஆணையைக் கொண்டிருப்பதாக கூறுவார்களாயின் அவர்கள் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என பொதுஜன பெரமுன சவால் விடுத்துள்ளது.

அத்தோடு நாடாளுமன்றில் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் ஒரு பிரேரணை கொண்டுவந்தால் அதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

17 Shares