தேர்தல் கேட்டு ஓலம் இடுபவர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலைச் சந்திக்கத் தயாரா என, அமைச்சர் மனோ கணேசன் சவால் விடுத்துள்ளார்.

அடுக்கடுக்காய் தேர்தலை நடத்தி மக்கள் பணத்தை விரயம் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டுள்ள அவர், முதலில் ஜனாதிபதித் தேர்தலையே நடத்தவுள்ளதாகவும் கூறினார்.

தமது அமைச்சுப் பொறுப்புக்களை இன்று பொறுப்பேற்ற அவர், செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே, இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”தேர்தலை சந்திக்க நாம் தயாராகவிருக்கின்றோம். ஆனால், தேர்தலை நடத்துவதற்கு கால அட்டவணையொன்று காணப்படுகிறது. வரையறையொன்று காணப்படுகிறது.

ஒரு பொதுத் தேர்தலை நடத்துவதென்றால் அதற்கொரு விலை இருக்கிறது. பொதுத் தேர்தலை நடத்துவதற்கு 500 கோடி செலவாகும். இதனை யாரும் மறந்துவிடக் கூடாது” எனத் தெரிவித்தார்.

9 Shares