இலங்கை வரலாற்றில் அமெரிக்கா டொலர் ஒன்றின் கொள்வனவு விலை பாரியளவில் அதிகரித்த முதல் சந்தர்ப்பம் இன்றாகும்.

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் வெளியிட்ட நாணய மாற்று வீகிதத்திற்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 182.7137 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 178.7451 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதற்கு முன்னர் டொலருக்காக அதி கூடிய விலை கடந்த நவம்பர் மாதம் 28ஆம் திகதி 182.2733 ரூபாவாக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

17 Shares