கிளிநொச்சி அறிவியல் நகரில் புதிதாக அமைக்கப்பட்ட தொடருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு இன்று கையளிக்கப்பட்டது.

கொழும்பில் இருந்து புறப்பட்ட உத்திராதேவி குறித்த நிலையத்தில் நிறுத்தப்பட்டது.

தொடருந்தில் வருகை தந்திருந்த அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவை வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண இந்தியத் துணைத் தூதுவர் வரவேற்றனர். தொடர்ந்து தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன், அமைச்சர் நினைவுக் கல்லினை திறந்து வைத்தார்.

தொடர்ந்து கட்டடத்தை திறந்து வைத்த அமைச்சர் பயணச் சீட்டினையும் வழங்கி வைத்தார்.

25 Shares