திம்புள்ள பத்தனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா தோட்டபகுதியில் ஏழு மாத ஆண் குழந்தையை வயரால் கழுத்து பகுதியை இறுக்கி கொலை செய்துவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்றுகொட்டகலை ரொசிட்டாபகுதியில் இடம் பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்26.01.2019.சனிகிழமை இரவுவேளையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

வீட்டில் எவரும் இல்லாத வேளையில் குறித்த தாய் தான் பெற்ற ஏழு மாதகுழந்தையை வயர் ஒன்றை எடுத்து கழுத்துபகுதியில் இறுக்கி கொலை செய்துள்ளதுடன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதோடு சம்பத்தை அறிந்த கணவன் கத்தியால் தன்னை தான்  குத்தி கொண்டு பலத்த காயங்களோடு நுவரெலியா வைத்தியசலையில்அனுமதிக்கபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மரண விசாரனைக்காக நுவரெலியா மாவட்ட நீதிமன்ற நீதவான் சம்ப இடத்திற்க்கு  வரவளைக்கபட்டு மரண விசாரனைகள் நிறைவடைந்த பின்னர் ஏழுமாத குழந்தையின் சடலம் மற்றும் தாயின் சடலமும் நுவரெலியாமாவட்ட வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல இருப்பதாகபொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கபட்ட தாய் 27வயதுடைய கிட்னன் நித்தியகல்யானி எனவும் கொலைசெய்யபட்ட ஏழு மாத சிசு சந்திபன் அல்வின்ஸ் என அடையாளம் காணபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமைகுறிப்பிடதக்கது.    

27 Shares