புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப்புலிகள் கட்சியின் உத்தியோகபூர்வ அலுவலகம் நேற்று (27) பொலிஸ் நிலைய வீதி ,1ம் வட்டாரம், வேணாவில் , புதுக்குடியிருப்பில் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

அதன் பின்னர் மாவீரர் குடும்பம் மற்றும் போராளி குடும்பம் உட்பட 50 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் கல்விக்கான உபகரணங்கள் 40 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

18 Shares