மலர்வு : 22.04.1934 — உதிர்வு :05.03.2019

யாழ். நயினாதீவை பிறப்பிடமாக கொண்ட அமரர் முருகேசு நற்குணசிங்கம்(முன்னாள் வை .சி .கு உணவக முதலாளியும், முன்னாள் கோண்டாவில் ஸ்ரீ வாணிவிலாஸ் முதலாளியும் ஆவார்) அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்ற முருகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகனும், காலம்சென்ற கதிரவேலு பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

காலம்சென்ற நீலாம்பிகையின் அன்புக் கணவரும்,
கந்தசாமி (கனடா ),லெட்சுமணன் (கொழும்பு ),தங்கராஜா (ஜெர்மன் ),நவரத்தினம் (இலங்கை ) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ,

தருமகுலராணி (இலங்கை ), தருமகுலசிங்கம்(சுவிஸ்),லோகநிதி(சுவிஸ்) ,முருகதாஸ்(பிரான்ஸ் ) ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.

குகனேசன் (இலங்கை ),மீனலோஜினி(இலங்கை ),சாத்தியராஜா(சுவிஸ் ),ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 07/03/2019 வியாழன் அன்று பிற்பகல் 2மணியளவில் நயினாதீவில் உள்ள இந்து மயானத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்படும்.\

இத்தகவலை உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் பிள்ளைகள் -நற்குணசிங்கம் முருகதாஸ் (பிரான்ஸ் )
தொலைபேசி – 0094769432650

17 Shares