யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவின் பனாமா ஏரி சேற்று பிரதேசத்தில் சிக்கிய உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞன் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வீதி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான பீ.சுதர்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த இளைஞன் பயண முகவர் ஒருவர் ஊடாக அமெரிக்கா செல்லும் வேளையில் , நேற்று முன்தினம் குறித்த இளைஞன் சேற்றுக்குள் சிக்கிய நிலையில், உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பனாமா ஏரி பிரதேசத்தில் நடைப்பயணத்தில் ஈடுபட்ட போது சேற்றுக்குள் சிக்கி அவரால் வெளியே வர முடியாமல் போனதாக அவருடன் சென்ற ஏனையவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரினால் பனாமா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில்

இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை உயிரிழந்த இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான உதவிகளை செய்யுமாறு உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

40 Shares