அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சி பிரமுகர்களுடனான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை (19) நற்பிட்டிமுனை சுமங்கலி மண்டபத்தில் மாலை 5:30மணி அளவில் இடம்பெற்றது.

இதன்போது அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட கட்சி பிரமுகர்களை சந்திக்கும் இக்கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் அவரது மகனும் பிரதேச சபை உறுப்பினருமான கலையமுதனும் கலந்து கொண்டுள்ளார்.

இந்த கட்சிக் கூட்டத்திற்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலர் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அம்பாறை மாவட்ட அக்கட்சி சார்பான மாநகர சபை பிரதிநிதிகள் இளைஞர் அணி என பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இக்கூட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்ற போதிலும் ஏற்பாட்டாளர்களால் செய்தி சேகரிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 Shares